Tuesday, October 14, 2014

வட மாகாண மக்களுக்கான செயற்திட்டங்களுக்காக அரசாங்கம் வழங்கிய நிதியில் 20 வீதத்தையே வட மாகாண சபை செலவிட்டுள்ளது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Tuesday, October 14, 2014
இலங்கை::வட மாகாண மக்களுக்கான செயற்திட்டங்களுக்காக அரசாங்கம் வழங்கிய நிதியில் 20 வீதத்தையே வட மாகாண சபை செலவிட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
 
இதன் மூலம் மக்களே அசெளகரியங்க ளுக்குள்ளாவதாக தெரிவித்த ஜனாதிபதி, அரசியல் வேறு அபிவிருத்தி வேறு என்பதை தெளிவுபடுத்திக்கொண்டு அவர்கள் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
 
வடக்கிற்கு பல கோடிக்கணக்கான ரூபா நிதியினை செலவிட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, 96 மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடங்களை வட மாகாண பாடசாலைகளுக்குப் பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கற்றறிந்த பாடல்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்கும் வைபவம் நேற்றைய தினம் கிளிநொச்சி இரணைமடு பிநெலும் பியசபீ அரங்கில் நடைபெற்றது.
 
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் புனர்வாழ்வு அதிகார சபை ஏற்பாடு செய்திருந்த மேற்படி நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் நடை பெற்றதுடன் 1218 பேருக்கு 115 மில்லியன் ரூபா நட்டஈடாக பகிர்ந்தளிக்கப்பட்டது.
 
வைபவம் நடைபெற்ற மண்டபத்துக்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு தமிழ் கலாசார முறைப்படி ஆரத்தி மற்றும் பொன்னாடை போர்த்தி கெளரவ மளிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டது.
 
இந்த நிகழ்வில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி உரையாற்றிய ஜனாதிபதி, தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன். 2009 மே மாதம் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதுடன் அந்த வருடமே டிசம்பர் மாதத்தில் கிளிநொச்சி பிரதேசத்தில் மக்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கைகளை நாம் ஆரம்பித்து விட்டோம்.
 
அதற்குப் பின்னர் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக நான் ஏழு தடவைகள் கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளேன்.
நாம் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் நடத்தவில்லை என்பதை நான் அடிக்கடி கூறி வந்துள்ளேன். பயங் கரவாதத்தை ஒழிப்பதுடன் ஆயுதங்களை அவர்கள் கீழே வைக்க வேண்டும் என்பதற்காகவே நாம் யுத்தம் செய்தோம். இந்த நிகழ்வுக்கு நான் வருகை தரும்போது இளைஞர்கள், யுவதிகளின் இசைக்கருவிகளுடன் நடனமாடி வரவேற்றனர்.

புலிபயங்கரவாதத்தை நாம் ஒழிக்காவிட்டிருந்தால் இவர்கள் இசைக்கருவிகளுக்குப் பதிலாக இவர்களது கரங்களில் துப்பாக்கிகளை ஏந்த வேண்டி இருந்திருக்கும்.
 
இப்போது வடக்கு மாகாணம் பாரிய அபிவிருத்திக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. இப்பிரதேச மக்களுக்காகவும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவ தற்காகவும் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
 
நாட்டு மக்களும் சர்வதேசமும் எதிர்பார்த்ததற்கிணங்க நாம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தினோம். 28 வருடங்களுக்குப் பின் வடக்கில் மாகாண சபை செயற்பட்டது. எனினும் துரதிஷ்டவசமாக மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிதியில் 20 வீத நிதியைக்கூட அவர்கள் மக்களுக்கான திட்டங்களுக்காக செலவிடாமல் உள்ளனர். இதனால் மக்களே அசெளகரியங்களுக்குள்ளாகின்றனர். வைக்கோல் பட்டறையில் நாய் படுத்துக் கொண்டு தானும் உண்ணாமல் மாட்டையும் மேயவிடாமல் செய்வது போல அவர்களும் சேவைகளை செய்வதில்லை. அரசாங்கம் செய்யவும் இடமளிப் பதில்லை. மக்கள் இது பற்றி சிந்திக்க வேண்டும்.
 
இந்நிகழ்வில் தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி, முப்பது வருட யுத்தம் வடக்கு மக்களுக்கு ஏற்படுத்திய துயரங்களையும் கஷ்டங்களையும் நாம் அறிவோம். கடந்த ஐந்து வருடகாலத்தில் வடக்கு மக்களுக்காக பல்வேறு உதவிகளை அரசாங்கம் வழங்கி வருகிறது. பல்லீவ்று செயற்திட்டங்களுக்காக பல கோடி ரூபாவை நாம் வழங்கியுள்ளோம். மேலும் பல உதவிகளை எதிர்காலத்திலும் வழங்கத் தீர்மானித்துள்ளோம்.
 
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் இன்று நிவாரணம் வழங்குகி றோம். அதே போன்று மத வழிபாட்டுத் தலங்களைப் புனரமைப்பதற்கும் நாம் நிதி உதவிகளைப் பெற்றுக்கொடுத் துள்ளோம்.
 
முப்பது வருட இருண்ட யுகம் இனி இந்த நாட்டில் இல்லை. வடக்கு உட்பட அனைத்து மக்களும் நிம்மதியாக பயம் செந்தேகமின்றி பாதுகாப்பாக வாழ முடியும். வடக்கின் வசந்தம் மூலம் நாம் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றோம்.
 
அரசியல் வேறு அபிவிருத்தி வேறு. இதனை நீங்கள் உங்கள் அரசியல் தலைவர்களுக்குத் தெளிவுபடுத்துங்கள். வடக்கின் அபிவிருத்திக்கென நாம் பெருமளவு நிதியினை செலவிட்டு வருகின்றோம். மேலும் நிதியினை ஒதுக்கத் தீர்மானித்துள்ளோம்.
 
வடக்கில் மாத்திரம் 96 மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடங்களை நாம் நிர்மாணித்து வழங்கியுள்ளோம். உங்கள் பிள்ளைகளுக்காக இவற்றைப் பெற்றுக்கொடுப்பதில் நாம் மகிழ்ச்சி யடைகின்றோம். பெற்றோர்கள் தம் பிள் ளைகளை ஊக்குவிப்பது அவசியமாகும்.
 
இனி உங்கள் பிரதேசம் கஷ்டப் பிரதேசமாக இருக்க முடியாது. கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுடன் சுய தொழில் வாய்ப்புக்கான வசதிகளையும் நாம் பெற்றுக்கொடுத்துள்ளோம்.
 
சிலர் தமது குறுகிய நோக்கங்களுக்காக உங்களை தவறாக வழிநடத்த முயற் சிக்கின்றனர். அவர்களுக்கு வெளி நாடுகளிலிருந்து பல வழிகளிலும் பெருமளவு நிதி கிடைக்கின்றது.
 
அவர்களின் குடும்பங்கள் வெளிநாட்டில் வாழ்வதுடன் சொத்து சுகங்களுடன் சொகுசான வாழ்க்கை நடத்துகின்றனர்.
 
பொய்ப்பிரசாரங்களை நம்ப வேண் டாம். வடக்கில் மட்டுமன்றி நாடு முழுவதிலும் ஏன் வெளிநாடுகளிலும் பொய்ப்பிரசாரங்களே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.
 
என்னைப் பொறுத்தவரை நான் தெற்கு மக்களைப் போன்றே வடக்கு மக்களையும் பார்க்கின்றேன். தெற்கிற்கும் வடக்கிற்கும் முழு நாட்டிற்கும் நானே ஜனாதிபதி. அனைத்து மக்களையும் ஒரே விதமாகவே கவனிப்பேன்.
 
நீங்கள் உங்களைப் பற்றியும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி யும் சிந்தியுங்கள். நாம் ஒன்றி ணைந்து செயற்படுவோம். உங்கள் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் உருவாகட்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment