Saturday, October 11, 2014
குர்திஷ் படையினரை வீழ்த்தி, சிரியா நாட்டு எல்லையின் மூன்றில் ஒரு பங்கை ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
சிரியா எல்லையில் கோபானி என்ற நகரத்தில் குர்திஷ் படையினரை வீழ்த்தியதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள், சிரியா நாட்டு எல்லையின் மூன்றில் ஒரு பங்கை கைப்பற்றியதாக, அங்கு இருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் குர்திஷ் படையின் முக்கியத் தலைவர் உட்பட பல வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், இதனை அடுத்து அங்கு வான்வழித் தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தி உள்ளதாகவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
துருக்கியில் ஏற்பட்ட கலவரங்களில் 2 போலீசார் உள்பட 6 பேர் பலி!
சிரியாவில் துருக்கி எல்லையில் அமைந்துள்ள கொபானி நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முன்னேறி வருகின்றனர். குர்து இன மக்கள் பெருவாரியாக வசித்து வந்த இந்த நகரை காக்க வலியுறுத்தி துருக்கியில் உள்ள அந்த இனத்தினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களில் வன்முறையும் வெடித்து வருகிறது.
இந்த நிலையில் அங்கு ஆங்கால் நகரில் கடந்த வாரம் நடந்த வன்முறையில் சிட்டி சென்டரில் தாக்குதலுக்கு ஆளான கடைகளை போலீசார் நேற்று பார்வையிட்டனர்.
அப்போது அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 போலீசார் உயிரிழந்தனர். ஒரு போலீஸ் அதிகாரி படுகாயம் அடைந்தார்.
இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இதற்கிடையே காஜியன்டெப் மாகாணத்தில் புதிதாக நேற்று போராட்டக்காரர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயம் அடைந்தனர்.

No comments:
Post a Comment