Pages

Wednesday, October 1, 2014

அளுத்கமை மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளின் போது, சேதமடைந்த வீடுகளில் 131 வீடுகள் புனரமைக்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிப்பு!

Wednesday, 01, October, 2014
இலங்கை::அளுத்கமை மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளின் போது, சேதமடைந்த வீடுகளில் 131 வீடுகள் புனரமைக்கப்பட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போது, அவர் இதனை தெரிவித்தார்.
 
87 வீடுகளின் சேதவிபரங்கள் அளவிடப்பட்டு அவற்றை நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதேவேளை 49 வர்த்தக நிலையங்கள் புனரமைக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் 24 வர்த்தக நிலையங்களை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
இந்த பணிகள் இன்னும் ஒரு சில மாதங்களில் நிறைவடையவுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment