Friday, October 17, 2014

முன்னாள் புலி உறுப்பினர்கள் 10 பேருக்கு காலி தொழிற்பயிற்சி நிலையத்தினூடாக தொழிற்பயிற்சி!

Friday, October 17, 2014
இலங்கை::பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 10 பேருக்கு காலி தொழிற்பயிற்சி நிலையத்தினூடாக தொழிற்பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
 
பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேற்படி முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு எதிரான விசாரணைகள் நிறைவடைந்த பின் இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
 
இதையடுத்து அவர்களுக்கு பாரவூர்தி உள்ளிட்ட வாகனங்கள் செலுத்துவது தொடர்பான இரு மாத கால பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 13 ஆம் திகதி இவர்கள் பயிற்சி முடிந்து வெளியேறியுள்ளனர்.
 
இவர்களுக்கு நாட்டின் பலபகுதிகளிலும் உள்ள பட்டறைகளில் மேலதிக பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர சர்வதேச தரத்திலான னியஙி சான்றிதழும் வழங்க இருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
 
இதேவேளை எதிர்காலத்தில் புனர்வாழ்வு அளிக்கப்படும் முன்னாள் புலிகளுக்கும் தொழிற்பயிற்சி வழங்க திட்டமிடப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment