Pages

Monday, September 8, 2014

சிறைக் கைதிகள் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கான ஆன்மீக அறிவுரைகள் வழங்கல் நிகழ்வு!


Monday, September 08, 2014
இலங்கை::சிறைக் கைதிகள் வாரத்தினை முன்னிட்டு நாடு பூராகவுமு; உள்ள சிறைச்சாலைகளில் நேற்றைய தினம் ஆரம்ப நாள் நிகழ்வுகள் நடைபெற்றன. 
அந்த வகையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கான ஆன்மீக அறிவுரைகள் வழங்கல் நிகழ்வு நடைபெற்றது. 
 
மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான சிறைச்சாலை அதிகாரி ஆர்.மோகனராஜா தலைமையில் நடைபெற்ற இந்த அறிவுரை வழங்கலின் போது, இந்து மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் கலந்து கொண்டு கைதிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.  
 
சிறைச்சாலை நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் கைதிகள் தின நிகழ்வில்,சிறைச்சாலை உத்தியோகத்தர் எம்.ஐ.சித்தி சபீனா நலன்புரி உத்தியோகத்தர் எல்.ஜெயசுதாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment