Pages

Wednesday, September 17, 2014

நோர்வே தூதுவர் கிரேடா தலைமையிலான குழு கிளிநொச்சி விஜயம்!

Thursday,September, 17, 2014
இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரேடா தலைமையிலான குழு நேற்று முன் (15.09.16)  கிளிநொச்சிக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் நோர்வே நாட்டின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகள் தொடர்பாக பார்வையிட்ட குறித்த குழுவினர் நேற்றயதினம் (16.09.14) காலை 8.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட அ.அதிபர் ரூபவதி கேதீஸ்வரனை சந்தித்து மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினார்.

குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அ.அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தின் இராணுவ பாதுகாப்பு தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இரணைமடுவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமைகள், மற்றும் இராணுவத்தினரின் செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
 
சந்திப்புக்களை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தை குறித்த குழுவினர் மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment