Pages

Wednesday, September 3, 2014

இயக்கச்சிப் பகுதியில் இன்று அதிகாலை, ரோந்து சென்ற இராணுவச் சிப்பாய் ஒருவர், வான் மோதி பலி!

Wednesday, September 03, 2014
இலங்கை::இயக்கச்சிப் பகுதியில் இன்று அதிகாலை, ரோந்து சென்ற இராணுவச் சிப்பாய் ஒருவர், வான் மோதி மரணமானார். துவிச்சக்கரவண்டியில் வீதி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவச் சிப்பாய் மீது வானொன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
 
விபத்தில், குருநாகலை சேர்ந்த ஆர்.டி.சுமிந்தகுமார (வயது 32) என்ற இராணுவச் சிப்பாயே பலியாகியுள்ளார். இவர், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இவ்விபத்துடன் தொடர்புடைய வான் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் வானை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றதாகப் பொலிஸார் மேலும் கூறினார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments:

Post a Comment