Pages

Tuesday, September 16, 2014

நிவ்யோக் நகரில் உள்ள ஐ.நாவின் 69வது பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்ப்பு!

Tuesday, September 16, 2014
நிவ்யோக் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெறவுள்ள 69 ஆவது பொதுக்கூட்டதில் கலந்து கொள்வதற்கு அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி ஐக்கிய அமரிக்கா செல்லவுள்ளார்.
மேலும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள இப்பொதுக்கூட்டதில் உலக தலைவர்களிடத்தில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளதுடன் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் கண்கானிப்பு அமைச்சர் சஜின் டி வாஸ் குணவர்தன ஆகியோர் ஜனாதிபதியுடன் செல்லவுள்ளனர்.
அத்துடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு முன்னர் செப்டம்பர் 19 ஆம் திகதி நியுயோர்க் செல்லவுள்ளார்.

No comments:

Post a Comment