Pages

Thursday, July 10, 2014

வியட்நாம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 16 பேர் பலி!

Thursday, July 10, 2014
ஹனோப்::வியட்நாம் தலைநகர் ஹனோயில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 16 பேர் உயிரிழந்தனர்.
 
வியட்நாம் ராணுவத்தைச் சேர்ந்த ரஷ்ய தயாரிப்பான எம்.ஐ.-171 ரக ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அதில் 21 பேர் இருந்தனர். ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட்டில் தரையிறங் கும் பயிற்சிக்காக வீரர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். தா சாட் என்ற புறநகர்ப் பகுதி யில் ஹெலிகாப்டர் பறந்தபோது எதிர்பாராதவிதமாக தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் 16 பேர் உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
 
இதுகுறித்து லெப்டினென்ட் ஜெனரல் வோ வான் டான் நிருபர்க ளிடம் கூறியபோது, வானிலை தெளி வாக இருந்துள்ளது; சதிச் செயலுக் கான வாய்ப்பும் இல்லை. தொழில் நுட்ப கோளாறு காரணமாகவே ஹெலிகாப்டர் விபத்து நேரிட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment