Tuesday, June 17, 2014

சிவில், சர்வமத அமைப்புக்கள் இணைந்து நடாத்திய ஊடகவியலாளர் மாநாடு!

Tuesday, June 17, 2014
இலங்கை::கொழும்பு கலதாரி ஹோட்டலில் சிவில் அமைப்புக்கள், சர்வமத அமைப்புக்கள் இணைந்து முஸ்லீம் கவுன்சிலின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நேற்று (16) ஊடகவியலாளர் மாநாட்டினை நடாத்தியது.

 
அருட்தந்தை சக்திவேல்:
 
நான் இன்று காலை எனது இருப்பிடத்தில் இருந்து அருகில் உள்ள கடையொன்றுக்குச் செல்லும் வேலையில், அங்கு குழுமியிருந்த ஒரு குழுவினர் ‘மாளிகாவத்தையையும் நாம் அடித்து நொறுக்க வேண்டும்’ என கதைத்துக்கொண்டிருப்பது எனது காதுகளுக்கு கேட்டது.
இந்த நாடு ஒர் இனத்துக்கு மட்டும் சொந்தமான நாடு அல்ல. சகல சமூகங்களுக்கும் சொந்தமானதொரு நாடாகும்.
இனங்களுக்கிடையே குரோத்தை பரப்பி இந்த நாட்டை மீண்டுமொரு இரத்தக் காடாக்கவே இவர்கள் நினைக்கின்றார்கள்.
 
முஸ்லீம்களின் கடைகளiயும், உயிர், உடைமைகளையும் எரிப்பதற்கு இவர்களுக்கு யார் அந்த பலத்தை வழங்கியது’ என கேள்வி எழுப்பினார்.
‘இந்த நாட்டின் சட்டத்தை செயற்படுத்த ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், நீதி அமைச்சும் உடனடியாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போது தமது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இவர்கள் கடந்த கால 77, 83ஆம் ஆண்டில் நடந்த வடுக்களை நீக்கிக்கொள்ள இன்றுவரை முயற்சிக்கின்றனர். அந்தக் காயம் ஆறாமலே உள்ளது.’
 
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க சங்கத்தின் பிரதிநிதி:
 
நான் இந்த இடத்தில் இருந்து ஒரு பௌத்தன் என்று சொல்வதற்கு வெற்கப்படுகின்றேன். எமக்கு புது ஆமதுரு – மெத்தா,கருணை கற்பித்தும் அதனை பௌத்தர்கள்.
ஆனால் இன்று அதற்கு மாறாகவே எம்மவர்கள் செயல்படுகின்றனர். இந்த நாட்டில் பலசேனாக்கள், என்றும் ராவன பலய என பலர் சட்டத்தையும் நீதியையும் கையில் எடுத்துக்கொண்டுள்ளனர்.
ஒரு சிறு தணிப்பட்ட பிரச்சினைக்காக அதற்கு ஒரு மஞ்சல் புடவை அணிந்த ஆமதுருவை முன்நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து சட்டத்தையும் ஒழுங்கையும் அவர்கள் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுகின்றனர்.
 
ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஜவன்:
 
இந்த நாட்டில் சிலர் செயற்படும் செயல்களுக்கு இந்த நாட்டில் வாழும் சகலரும் அமைதியாக இருந்துவிடாமல் அவர்களுக்கு எதிராக உடன் செயப்படல் வேண்டும்.
அதற்காக நாம் வீதிக்கு இறங்கி இவர்களை கட்டுப்படுத்தல் வேண்டும். இவர்கள் வெளியில் வந்தால் நம்மவர்களே இவர்களை துரத்த வேண்டும்.
 
திருமதி சாமிலா தளுவத்த சட்டத்தரணி:
 
நமோ நமோ மாத்தா நாம் அணைவரும் எக்க மத தருவோ நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்று ஏன் பாடுகின்றார்கள்.
 
1983ல் ஆரம்பித்து கடந்த 30 வருட கால யுத்தத்தின் நாம் இன்னும் விடிவுபெறவில்லை. அதற்குள் இன்னுமொறு சகோதர சமுகத்தினை சீண்டி அதில் குளிர் காய சிலர் நிணைக்கின்றனர்.
 
இங்கு நடைபெறுவது சிறு தணிப்பட்ட பிரச்சினைக்கு அதற்காக முழு தேசியத்தையும் தேசியப்பிரச்சினையாக சிலர் செயல்படுகின்றனர். அதனை நாம் வண்மையாகக் கண்டிக்கின்றோம்.
 
ஒரு முஸ்லீம் சிறுவனும் பௌத்த சிறுவனும் பந்து விளையாடும்போது முஸ்லீம் சிறுவன் பௌத்த சிறுவன் பந்தால் அடித்தால் அது ஒரு பௌத்த பிரச்சினையா? இதனை சற்று சிந்தித்து செயல்லாற்றும்படி வேண்டிக்கொண்டார்.
 
எனது நிறைய முஸ்லீம் நண்பர்கள் இன்று தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவில்லை. சிலர் வெளியில் வராமல் வீடுகளில் தங்கியுள்ளனர். அநத் நிலைக்கு மீண்டும் ஏற்படுத்துகின்றனர்.

No comments:

Post a Comment