Saturday, June 07, 2014
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 26ம் அமர்வுகள் நடைபெறவுள்ளன. இந்த அமர்வுகளின் ஆரம்ப நிகழ்வுகளின் போது இலங்கை விவகாரம் குறித்து நவனீதம்பிள்ளை குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்கள் இன்னமும் ஆறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய காரணிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நம்பகமாக உண்மையைக் கண்டறியும் பொறிமுறைமையில் இணைந்து கொள்ளுமாறு இலங்கையை அழைக்க நவனீதம்பிள்ளை, 26ம் அமர்வுகளின் ஆரம்ப நிகழ்வுகளைப் பயன்படுத்திக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் திட்ட வட்டமாக அறிவித்துள்ளது.
இலங்கை::ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகளுக்கு
இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின்
ஆணையாளர் நவனீதம்பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித
உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இலங்கை தொடர்பில்
நவனீதம்பிள்ளை விசாரணைக் குழுவொன்றினை நிறுவ உள்ளார். இந்த விசாரணைகளுக்கு
அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமானது என நவனீதம்பிள்ளை
மீண்டும் வலியுறுத்தியுள்ளாா்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 26ம் அமர்வுகள் நடைபெறவுள்ளன. இந்த அமர்வுகளின் ஆரம்ப நிகழ்வுகளின் போது இலங்கை விவகாரம் குறித்து நவனீதம்பிள்ளை குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்கள் இன்னமும் ஆறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய காரணிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நம்பகமாக உண்மையைக் கண்டறியும் பொறிமுறைமையில் இணைந்து கொள்ளுமாறு இலங்கையை அழைக்க நவனீதம்பிள்ளை, 26ம் அமர்வுகளின் ஆரம்ப நிகழ்வுகளைப் பயன்படுத்திக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் திட்ட வட்டமாக அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment