Wednesday, June 11, 2014

அநுராதபுரம் வான்படை முகாம் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் வான் புலிகள் படையின் முன்னாள் தலைவரின் விளக்கமறியல் நீடிப்பு!

Wednesday, June, 11, 2014
இலங்கை::அநுராதபுரம் வான்படை முகாம் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் விஷேட மேல்நீதிமன்றில் கடும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள புலிகள் அமைப்பின் வான் புலிகள் படையின் முன்னாள் தலைவரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி அவர் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இவர் நேற்றைய தினம் அநுராதபுரம் விஷேட மேல்நீதிமன்ற நீதிபதி பேமா சுவர்ணாதிபதி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்  பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
ராசவல்லன் தபோரூபன் என்ற இவர், கடந்த 2007 ஆம் ஆண்டு அநுராதபுரம் வான்படை முகாம் மீது தரை மற்றும் வான் தாக்குதல்களை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
இந்த தாக்குதல் காரணமாக, 10 வானுர்திகள் முற்றாக சேதடைந்ததுடன், 6 வானுர்திகள் பகுதியளவில் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment