Pages

Wednesday, June 11, 2014

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்படும்: வில்லியம் ஹேக்!

Wednesday, June, 11, 2014
லண்டன்::இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
யுத்த வலயங்களில் பலியல் வன்கொடுமைகளை தடுக்கும் சர்வதேச மாநாட்டில் பங்கேற்ற போது அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடு கடத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முழு அளவில் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் ஒர் நாடு எனவும், எவரேனும் குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்தால் அது குறித்து விசாரணை நடாத்த எந்த நேரத்திலும் தயார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment