Wednesday, June, 11, 2014
சென்னை::எழும்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிபிசிஐடி அலுவலகத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார். சென்னை எழும்பூரில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் இயங்கி வந்தது. மிகவும் பழமை வாய்ந்த கட்டிடம் என்பதால் அதற்கு மாற்றாக வேப்பேரியில் பிரமாண்டமான தரை தளத்துடன் 8 மாடி கொண்ட புதிய கமிஷனர் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. இதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். தற்போது, அனைத்து அலுவலக பணிகளும் புதிய கமிஷனர் அலுவலகத்தில் நடந்து வருகிறது.இதற்கிடையில், கிண்டியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு மாற்றாக புதிய அலுவலகம் கட்ட வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 2010ம் ஆண்டு எழும்பூரிலுள்ள பழைய கமிஷனர் அலுவலகத்தில் ரூ.10 கோடியே 17 லட்சம் செலவில் 5 மாடி கொண்ட புதிய சிபிசிஐடி அலுவலகம் கட்டும் பணி தொடங்கியது. கடந்த ஆண்டே அனைத்து பணிகளும் முடிவடைந்தது. இந்த கட்டுமான பணிகளை அரசு உயரதிகாரிகள் அடிக்கடி சென்று ஆய்வு நடத்தி வந்தனர்.
இந்நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள சிபிசிஐடி அலுவலகத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று காலை 11.25 மணிக்கு திறந்து வைத்தார். அமைச்சர்கள், தலைமை செயலக அதிகாரிகள், போலீஸ் டிஜிபி ராமானுஜம், கமிஷனர் ஜார்ஜ், கூடுதல் கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் சிபிசிஐடி அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா புகைப்படம் எடுத்து கொண்டார். பின்னர் சிபிசிஐடி அதிகாரிகள் பெற்ற விருதுகளை ஜெயலலிதா பார்வையிட்டார்.குடியிருப்புகள் திறப்பு: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், சேலம், திண்டுக்கல், தஞ்சாவூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 130 காவலர் குடியிருப்புகள். திருவண்ணாமலை, கடலூர், விருதுநகர், திருச்சி மாவட்டம் மத்திய சிறைசாலை எதிரிலும் சிறுகனூரிலும் 103 காவலர் குடியிருப்புகளை ஜெயலலிதா திறந்து வைத்தார்.திருவண்ணாமலை, விருதுநகர் மாவட்டங்களில் 1 கோடியே 42 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 15 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை குடியிருப்புகள் உள்பட ரூ.113 கோடியே 31 லட்சத்து 29 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட கட்டிடங்களை வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.

No comments:
Post a Comment