Wednesday, June 18, 2014
இலங்கை::அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க நேற்றுக் காலை முதல் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு ள்ளதாக இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஊடக மையத்தின் பணிப் பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
அளுத்கம, பேருவளை, வெளிப்பன்ன, தர்கா நகர் மற்றும் மக்கொன ஆகிய பிரதேசங்களிலே பொலிஸாருக்கு உதவியாக இராணுவத்தினர் விசேடமாக மேலதிக பாகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை மேற்படி பிரதேசங்களில் இராணுவத்தினர் பொலிஸாருடன் இணைந்து விசேட வாகன ரோந்து நடவடிக்கைகளிலும்
முழுமையாக ஈடுபட்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சம்பவம் நடைபெற்ற பிரதேசங்களில் பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த அதேசமயம் ஊரடங்கு சட்டம் அமுலிலிருந்த அளுத்கம, பேருவளை பிரதேசங்களின் பிரதான வீதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரதான வீதிகளில் வாகன போக்கு வரத்திற்கு தடை ஏற்படாத வகையில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டு வந்தனர்.

No comments:
Post a Comment