Saturday, June 7, 2014

நெல்சன் மண்டேலா பெயரில் ஐ.நா. விருது ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் அறிவிப்பு!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

Saturday, June 07, 2014
நியூயார்க்::தென் ஆப்ரிக்காவின் விடுதலைக்கு முக்கிய பங்காற்றிய நெல்சன் மண்டேலாவுக்கு புகழ் சேர்க்கும் விதத்தில் ஐ.நா. விருது வழங்கப் போவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் அறிவித்துள்ளார்.ஐ.நா. சபைக்கான பொதுக்குழு கூட்டம் நேற்று நியூயார்க் நகரில் நடைபெற்றது. ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மறைந்த நெல்சன் மண்டேலா பெயரில் புதிய விருது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தென் ஆப்ரிக்காவின் விடுதலைக்கு நெல்சன் மண்டேலா தனது இளமை காலம் முழுவதையும் அர்ப்பணித்தார். பின்னர் நாடு விடுதலை அடைந்ததும், அந்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று, பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி காட்டினார்.தென் ஆப்ரிக்காவின் வளர்ச்சிக்கும் உலக நாடுகளின் வளர்ச்சிக்கும் உதவிய நெல்சன் மண்டேலாவின் பங்கை வரலாற்றில் பதிக்கும் வகையில் அவர் பிறந்த தினமான ஜூலை 18, ஐக்கிய நாடுகள் சபையால் நெல்சன் மண்டேலா சர்வதேச தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  தற்போது அவரது பெயரில் புதிதாக விருது ஒன்றை வழங்கவும் ஐ.நா. முடிவு செய்துள்ளது. இந்த விருதை எந்தத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கலாம் என்பதை ஆலோசித்து, இன்னும் 6 மாதத்துக்குள் அறிவிக்கப்படும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் கூறினார்.

No comments:

Post a Comment