Thursday, June 12, 2014
இலங்கை::இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்தாலும் கவலைப்படப் போவதில்லை
என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர
தெரிவித்துள்ளார். இலங்கை விடயத்தில் முடிவெடுக்கும் அதிகாரமோ எமது
நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கும் உரிமையோ சர்வதேசத்திற்கு இல்லை.ஐ.நா.
மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு இலங்கையில் எந்த
செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்கான அதிகாரம் இல்லை. சர்வதேச
விசாரணைக்குழுவினை அவர் நியமித்தாலும் அரசாங்கத்தின் அனுமதியின்றி அவர்
உள்நுழைய முடியாது.
இந்த விடயத்தில் அரசாங்கம் மிகவும் உறுதியாக உள்ளமை எமக்கு பெருமையாக
உள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் நாட்டின் மீது அரச தரப்பு
கொண்டுள்ள அக்கறையையும் நாம் எப்போதும் வரவேற்போம். அதேபோல்
சர்வதேசத்தினால் இலங்கை மீதான பொருளாதாரத் தடையினை மட்டுமே மேற்கொள்ள
முடியும். இது எமக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. ஏனெனில் எமது
உற்பத்திகள் எமது வளங்கள் இந்த நாட்டில் இருக்கின்றன. அவைகளை வைத்து எமது
நாட்டின் பொருளாதாரத்தினை மேம்படுத்த முடியும்.
வெறுமனே மேற்கத்தேய நாடுகளின் உதவியினை மட்டும் நம்பியிருந்த காலம்
மாறிவிட்டது. அவர்களின் பொருளாதார உதவிகளோ அல்லது அவர்களின் பாதுகாப்போ இனி
ஒரு போதும் எமக்குத் தேவையில்லை.சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பினை வழங்கி
இலங்கையின் சுயாதீனத் தன்மையினை சீரழிப்பதை விடவும் துணிந்து ஆட்சி
நடத்துவது சிறந்தது.அதேபோல் புதிய நாடுகளுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்
கொண்டு அவர்களுடன் நட்புறவுச் செயற்பாட்டினை வளர்த்துக் கொண்டு புதிய
அத்தியாயத்தை நோக்கி புறப்படும் காலம் நெருங்கிவிட்டது.
அரசாங்கத்திற்கு சிங்கள மக்களின் ஆதரவு எப்போதும் உண்டு. நாட்டில் சுய
ஆட்சியினை விரும்பும் மக்களே அதிகம். எனவே, அவர்களின் ஆதரவு இருக்கும்
வரையில் நாட்டிற்கு எதிரான எந்த சக்தியும் செயற்பட முடியாது. அதேபோல்
எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவினை வழங்கும் விதத்தில்
ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் நடவடிக்கைகளை கண்டித்து நாடு தழுவிய ரீதியில்
ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment