Pages

Thursday, June 19, 2014

கொலை வழக்கு விசாரணையை வீடியோ கான்பரன்சில் நடத்த வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல!

Thursday, June 19, 2014
சென்னை::தன் மீதான கொலை வழக்கு விசாரணையை வீடியோ கான்பரன்சில் நடத்த வேண்டுமென  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார். 
 
அமைச்சர் டக்லஸ் தேவானந்தம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த 1986ம் ஆண்டு என் மீது ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் நேரில் ஆஜராக எனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். இதை கோர்ட் நிராகரித்து விட்டது.
 
சென்னை வந்தால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே, வழக்கு விசாரணையை வீடியோ கான்பரன்சில் நடத்த அனுமதிக்க வேண்டும். நான் கோர்ட்டில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
 
மேலும், மனுவை தாமதமாக தாக்கல் செய்துள்ளதற்கு வருத்தம் தெரிவித்து மனுவை ஏற்று கொள்ள வேண்டுமென கோரியிருந்தார்.மனுவை நீதிபதி சிவஞானம் இன்று விசாரித்து, கால தாமதமாக தாக்கல் செய்ததை ஏற்று கொண்டதற்காக ரூ.500யை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு செலுத்த உத்தரவிட்டார். பின்னர், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தார்.

No comments:

Post a Comment