Pages

Tuesday, June 3, 2014

மட்டக்களப்பு இந்திய வீடமைப்பு திட்டம் தொடர்பாக பயனாளிகளுக்கு விளக்கம் அளிக்கும் கூட்டம் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில்!

Tuesday, June 03, 2014
இலங்கை::இந்திய வீடமைப்பு திட்டம் தொடர்பாக பயனாளிகளுக்கு விளக்கம் அளிக்கும் கூட்டம் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பேத்தாழை குகனேசன் மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
இங்கு அவர் கூட்டத்தில் கலந்து கொண்ட பயணாளிகளிடம் கருத்து தெரிவிக்கையில்,

மேற்படி திட்டம் தொடர்பாக பேத்தாழை கிராமத்தில் வீடு இல்லாமல் வாழ்கின்ற வறிய மக்களுக்கு 40 வீடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்;காக தற்போது 100 விண்ணப்பங்கள் கிடைக்கப்பட்டு;ள்ளதாகவும் பயனாளிகள் தெரிவு தொடர்பான தீர்மானத்தினை இந்திய வீடமைப்பு திட்ட உயர்மட்டக் குழுவினர் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களை பரிசீலனை செய்து முடிவு எடுப்பார்கள்.

அவர்களது தெரிவு சரியான தெரிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இறுதித் தீர்மானமாக நடவடிக்கை கொள்ளப்படும்.இவ் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய பொறுப்பு உங்களிடம் உள்ளது. அவர்களுக்கு இடைஞ்சல் விளைவிக்கக்கூடாது.

பயனாளிகள் தொடர்பான பொருத்தமானவர்களை தெரிவு செய்வதே அவர்களது கடடையாகும் என்று தெரிவித்தார்.

இந் நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி ரி.தினேஸ் மற்றும் திட்டமிடல் பனணிப்பாளர் எஸ்.தேவாகரன் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment