Pages

Thursday, June 5, 2014

தமிழக முதல்வர் ஜெயலிதாவின் தனி ஈழம் அமைக்கும் முனைப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது: ஐ.தே.க!

Thursday, June 05, 2014
இலங்கை::தனி ஈழம் அமைக்கும் முனைப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. தனி ஈழமொன்றை அமைப்பது குறித்து இலங்கை மற்றும் புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கு மத்தியில் சர்ஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலிதா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியுள்ளார். எனினும், இந்தக் கோரிக்கை ஏற்புடையதல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்

ஐக்கிய இலங்கை மற்றும் நாட்டின் பௌதீக ஒருமைப்பாடு ஆகியன தொடர்பில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விவகாரங்களில் சர்வதேச நாடுகளின் தலையீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment