Pages

Thursday, June 5, 2014

கடும் மழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக அனர்த்தங்களில் பாதிப்புற்ற மக்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் படையினர் மும்முறம்!

Thursday, June 05, 2014
இலங்கை::கடும் மழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு சிக்கித் தவித்த 326 பேர் பாதுகாப்புப் படையினரால் இது வரை பாதுகாப்பாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஊடக மையத்தின் பணிப்பாளரும் பேச்சாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
 
இதன்படி இராணுவத்தினர் களுத்துறை மாவட்டத்தில் 192 பேரையும், இரத்தினபுரி மாவட்டத்தில் 12 பேரையும் கடற்படையினர் களுத்துறை மாவட்டத்தில் 122 பேர் என்ற அடிப்படையில் 326 பேரையூம் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
இதேவேளை கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்படும் அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் மேல்., தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மேலும் 600 இராணுவ வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
சீரற்ற கால நிலையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்டெடுத்து அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளை முப்படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே நிவாரண நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ள 500 பேர் அடங்கிய இராணுவக் குழுக்களும், கடற்படையின் 10 மீட்புக் குழுக்களும் விமானப்படை ஹெலிகொப்டர்களும் தொடர்ந்தும் தமது பணிகளை முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment