Pages

Wednesday, June 11, 2014

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக நியமனம் பெற்ற கிராம சேவையாளர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு!

Wednesday, June, 11, 2014
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் வகையில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள கிராம சேவையாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமங்களில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் வகையில் போட்டி பரீட்சைகள் மூலம் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 72பேர் கிரா சேவையாளர்களாக தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் கிராமிய ரீதியில் பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பது தொடர்பிலான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் கடமைக்கமர்த்தப்படவுள்ளனர்.

இதன் கீழ் முதல் கட்டமாக 66பேருக்கான நியமனக்கடிதங்கள் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் கே.ரங்கநாதன்,மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா,பிரதேச செயலாளர்கள்,உதவி பிரதேச செயலாளர்களும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment