Saturday, June 14, 2014

உக்ரைன் ராணுவ விமானம் தகர்ப்பு!

Saturday, June 14, 2014
கிவ் : ரஷ்ய பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உக்ரைன் நாட்டின் ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தி உள்ளனர்.
 
இதில் பாதுகாப்புப் படை வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
பெரிய அளவிலான மிஷின்கன்னை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் எல்லைப் பகுதியான லுகன்ஸ்க் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment