Tuesday, June 10, 2014

தலாய் லாமாவுடன் நிபந்தனையற்ற பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் சீனாவுக்கு அமெரிக்கா கண்டிப்பு!

Tuesday, June 10, 2014
வாஷிங்டன்:: திபெத் விவகாரம் தொடர்பாக தலாய் லாமாவுடன் நிபந்தனையற்ற பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என சீனாவுக்கு அமெரிக்கா கண்டிப்புடன் 

தெரிவித்துள்ளது.அமெரிக்க அரசின் துணை செய்தி தொடர் பாளர் மேரி கார்ப் நிருபர்களிடம் கூறியதாவது,சீனாவின் ஆதிக்கம் உள்ள திபெத் பகுதிகளில் மனித  உரிமை நிலைமைகள் குறித்து அமெரிக்கா கவலையுடன் பரிசீலித்து வருகிறது.திபெத் விவகாரம் குறித்து அதன் தலைவர் தலாய் லாமாவுடன் சீனா உறுதியான  பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்று தொடர்ந்து அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

திபெத் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவர் களது கலாச்சாரம்  மற்றும் பண்பாட்டிற்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் அச்சுறுத்தல் குறித்து இருதரப்பும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இது தொடர்பான சீனா எந்தவித முன்  நிபந்தனையும் இன்றி தலாய் லாமாவுடன் பேச்சு வார்த்தை நடத்த முன்வரவேண்டும்.திபெத்தின் லாசாவில் அமெரிக்கா தனது தூதரகத்தை தொடங்குவதற்கு சீனா  ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அங்கு தூதரக அதிகாரிகள் சென்று வருவதற்கும், திபெத் பழங்குடியின மக்களை சந்திப்பதற்கும் சீனா ஒத்துழைப்பு அளிக்க  வேண்டும்.

No comments:

Post a Comment