Pages

Tuesday, June 10, 2014

82 பேர் இன்று மாலை விடுதலை படகுகளை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் மீனவர்கள் அறிவிப்பு!

Tuesday, June 10, 2014
ராமேஸ்வரம்::இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்கும் வரை காலவரையற்ற போராட்டம் தொடரும் என்று ராமேஸ்வரம்  மீனவர்கள் அறிவித்துள்ளனர். தமிழக கடலில் 45 நாள் மீன்பிடி தடைகாலம் முடிந்து மீண்டும் கடலுக்கு சென்ற முதல் நாளிலேயே (மே.31) இலங்கை  கடற்படையினர் 29 தமிழக மீனவர்களையும், 6 படகுகளையும் சிறைபிடித்து சென்றனர். பின்னர் 29 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், படகுகள்  விடுவிக்கப்படவில்லை.  இந்நிலையில் கடந்த 7ம் தேதி ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மற்றும் புதுக்கோட்டை பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்றபோது  இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 82 தமிழக மீனவர்கள் அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
மத்திய அரசின்  தொடர் நடவடிக்கையை அடுத்து இலங்கை அதிபர் ராஜபக்சே, தமிழக மீனவர்களை விடுவிக்க நேற்று உத்தரவிட்டார். இன்று மாலையில் 82 மீனவர்களும்  விடுவிக்கப்படுவார்கள். நாளை மாலைக்குள் மீனவர்கள் அனைவரும் தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மீனவர்களின் படகுகளை  விடுவிப்பதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 6 படகுகள் இலங்கை கடற்படை வசம் உள்ள நிலையில் தற்போது கைப்பற்றப்பட்ட 18 படகுகள்  சேர்த்து மொத்தம் 24 விசைப்படகுகள் இலங்கை வசம் உள்ளது. இது குறித்து மீனவர் சங்க தலைவர் சேசுராஜ் கூறுகையில்,படகுகளை வைத்துக்கொண்டு  மீனவர்களை மட்டும் விடுதலை செய்யும் நிலையில் ஊர்திரும்பும் மீனவர்கள் எவ்வித தொழிலும் இல்லாமல் அன்றாட சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் சூழல்  ஏற்படும். மத்திய, மாநில அரசுகள் 24 படகுகளையும் மீட்டுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார். கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை  விடுவிக்கும் வரை காலவரையற்ற போராட்டம் தொடரும் என்றும் வாயில் கருப்பு துணி கட்டி நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் மீனவர் சங்கத்தினர்  முடிவெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment