Thursday, June 12, 2014

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ழுவினை அனுமதிப்பது குறித்து 17ம் திகதி விவாதம்!

Thursday, June 12, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவினை அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் 17ம் திகதி இலங்கை பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது.

விசாரணைக்குழுவிற்கு அனுமதியளிக்கக் கூடாது என ஆளும் கட்சி பாராளுமன்றில் யோசனைத் திட்டமொன்றை முன்வைக்க உள்ளது. இது தொடர்பிலான விவாதம் 17ம் திகதி நடத்தப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்றில் யோசனை சமர்ப்பிப்பது குறித்து நாளைய தினம் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் விசேட கூட்டமொன்று நடத்தப்பட உள்ளது. இதேவேளை, ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவினர் நாட்டுக்குள் பிரவேசித்து விசாரணை நடாத்த அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து 17ம் திகதி காலை நடைபெறவுள்ள கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது,

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. விசாரணை நடாத்தும் பிரதிநிதிகளை நாட்டுக்குள் அனுமதிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை என முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதேவேளை, விசாரணைகளுக்கு அனுமதியளிக்கக் கூடாது எனத் தெரிவித்து ஆளும் கட்சியின்ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் யோசனையொன்றை ஒப்படைத்துள்ளது.

மாலினி பொன்சேகா, ஏ.எச்.எம். அஸ்வர், ஆர்.துமிந்த சில்வா, சாந்தபண்டார, அசல ஜாகொட, பீ.சூரியப்பெரும, பியன்த பண்டார, நிமால் விஜேசிங்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த யோசனையை சபாநாயகர், சமால் ராஜபக்ஷவிடம் ஒப்படைத்துள்ளனர்.

No comments:

Post a Comment