Pages

Thursday, May 1, 2014

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் மேதின நிகழ்வு!

Thursday,May01,2014
இலங்கை::தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் மேதின நிகழ்வு இன்று வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இன்று காலை மட்டக்களப்பு மண்கூண்டு கோபுரத்தில் இருந்து நிகழ்வு நடைபெற்ற சார்ள்ஸ் மண்டபம் வரையில் தொழிலாளர்கள் உரிமையை பாதுகாப்போம் என்னும் கோசத்துடன் மாபெரும் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான
 
பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன்,கிழக்கு
 
மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், இரா.துரைரெட்னம், கி.துரைராஜசிங்கம், ஞா.கிருஸ்ணபிள்ளை,மா.நடராசா,பிரசன்னா இந்திரகுமார்,கலையரசன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்களின் சிறப்புரைகளும் இடம்பெற்றன.

No comments:

Post a Comment