Monday, April 21, 2014
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் இரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக colombo ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கில் மக்களைக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்த முயற்சிக்கப்படுகின்றது என்றும், மீனவர் மற்றும் கூட்டுறவு போன்ற சங்கங்களுக்கு உறுப்பினர்களைத் திரட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளது என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிரான தரப்பினர் இந்த விடயத்தை புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளனர். புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள், கடந்த சில வாரங்களாக இவ்வாறு சங்கங்களுக்கு ஆட்களை திரட்டும் இரகசிய திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மக்களுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆதரவளிப்பதனால், இலங்கை அரசாங்கத்திற்கு மக்கள் அஞ்சத் தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment