Pages

Tuesday, April 1, 2014

சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று கூறினால் அதில் முதன்முதலில் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் த.தே.கூட்டமைப்பில் உள்ளவர்களையே: விநாயகமூர்த்தி முரளிதரன்!

Tuesday, April 01, 2014
இலங்கை::கல்முனை ஆதார வைத்தியசாலையின் அனைத்து தேவைகளையும் பூர்த்திசெய்வதற்கான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராகவுள்ளதாக தெரிவித்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,வைத்தியசாலையின் குறைகளை தீர்க்கும் வகையில் விரைவில் சுகாதார அமைச்சரை வைத்தியசாலைக்கு அழைத்துவருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

பல காலமாக அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களுக்கு மட்டுமன்றி சகல இன மக்களுக்கும் இனமதபேதமின்றி தனது சேவையினை வழங்கிவந்த கல்முனை ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சியினை தடுத்து அதன் மூலம் வேறு வைத்தியசாலைகளை வளப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.

இந்த நிலையில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேற்கொண்ட அயராத முயற்சி காரணமாக வைத்தியசாலை புதிய அத்திட்சகராக முரளீஸ்வரன் என்பரையும் நியமித்து கல்முனை ஆதார வைத்தியசாலையின் நிர்வாகம் சீர்படுத்தப்பட்டுவருகின்றது.

இதனையொட்டி முன்பு கல்முனை வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றிய இராஜேந்திரன் வைத்தியசாலையின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளராகவும் கடமையினை பொறுப்பேற்றுள்ளார்.

இந்த நிலையின் கல்முனை ஆதார வைத்தியசாலையினை மேலும் முன்னோக்கி கொண்டுசெல்லும் வகையில் திட்டமிடல் பிரிவு ஒன்று வைத்தியசாலையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு  நேற்று திறந்துவைத்தார்.கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.


இலங்கையிலே சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று கூறினால் அதில் முதன்முதலில் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் த.தே.கூட்டமைப்பில் உள்ளவர்களையே விசாரிக்க வேண்டும்

இலங்கையிலே நடைபெற்ற அழிவுகளுக்கு மிகவும் பெரும் பங்காற்றியவர்கள் இன்று த.தே.கூட்டமைப்பில் இருக்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களுமே அனைத்து அழிவுகளுனக்கும் காரணம்.

இந்திய படை இலங்கைக்கு வந்தபோது அதனோடு சேர்ந்து எமது இனத்தினை கொன்றொழித்ததில் இவர்களுக்கு பெரும் பங்கு உண்டு இப்படிப்பட்டவர்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது சர்வதேச விசாரணை ஒன்றினை கோருவதற்கு.

இவர்கள் புனிதமானவர்கள் என்றால் அவர்கள் சர்வதேச விசாரணையைக் கோரலாம் அன்று மண்டையன் குழு என்று தங்களை அடையாளப்படுத்தி தமிழ், முஸ்லிம் மக்களை கொன்றொழித்தவர்கள் இன்று த.தே.கூட்டமைப்பென்ற பெயரில் பாராளுமன்றத்தில் ஆசனங்களை அலங்கரிக்கின்றார்கள்.

அரசாங்கம் என்பது மக்கள் சக்தி கொண்ட அமைப்பு யார் அரசாங்கத்திற்கு சக்தியைக் கொடுக்கின்றார்களோ அவர்களுக்குத்தான் அரசாங்கம் உதவி செய்யும் அதனை விடுத்து சக்தியை கொடுக்காதவர்களுக்கு எப்படி உதவி செய்ய முடியும் என்பதனை நீங்கள் அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

முஸ்லிம் மக்கள் இந்த நாட்டு ஜனாதிபதிக்கு தங்களது முழு ஆதரவினையும் வழங்குகின்றார்கள். ஆனால் தமிழர்களோ 100 வீதம் எதிர்ப்பினையே காட்டி வருகின்றார்கள் அப்படி இருக்கும் போது எப்படி அவரிடம் சென்று உதவி கேட்க முடியும்.

இலங்கையிலே 4 தமிழர்கள்தான் அமைச்சர்களாக இருக்கின்றார்கள். அதில் ஒருவனாக நான் இருக்கின்றேன். நான் பலமான அமைச்சராகத்தான் இருந்து வருகின்றேன் என்னை சிறந்த முறையில் பயன்படுத்தினால் நீங்கள் அடையவேண்டிய அனைத்தையும் அடையலாம்.

நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உபதலைவராக இருப்பதன் காரணத்தினால் அடிக்கடி ஜனாதிபதியினை சந்தித்து கலந்துரையாடுவேன். அப்போது எமது பிரச்சனைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்து அதற்கான தீர்வினையும் பெற்றுக்கொள்ள முடியும்.

30வருட காலப் போராட்டத்தில் மூன்று இனங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இந்த யுத்ததிதினை முடிவிற்கு கொண்டு வந்ததன் மூலம் இன்று எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன.
வாழ்க்கைக்காகத்தான் நான் போராடச் சென்றிருந்தேன். ஆனால் போராட்டமே வாழ்க்கையாக மாறிவிட்டது. இதன் மூலம் எத்தனையோ தாய்மார்கள் ஆயிரக்கணக்கில் தங்களது பிள்ளைகளை இழந்திருக்கின்றார்கள். இவர்களுக்கெல்லாம் தற்போது விடிவு கிடைத்திருக்கின்றது. அதன் மூலம் அவர்கள் இன்று அமைதியான வாழ்க்கை வாழ்கின்றார்கள்.

நாம் ஒவ்வொருவரும் 30வருட காலத்திற்கும் முற்பட்ட அரசியலை சிந்திக்கவேண்டி இருக்கின்றது. அப்போதுதன் நாம் சரியான இலக்கை நோக்கி பயணிக்க முடியும். அந்தக்காலத்தில் தமிழர்கள் எத்தனையோ பேர் அமைச்சர்களாக இருந்திருக்கின்றார்கள். அதனைக் கருத்தில் கொண்டு இன்று செயற்பட வேண்டிய காலம் வந்திருக்கின்றது.

கல்விதான் எமது சொத்து அதனை முன்னேற்றுவதற்காகத்தான் அயராது பாடுபட்டு உழைத்துக்கொண்டு வருகின்றேன் யுத்தத்தினால் அதிகமானவற்றை இழந்திருக்கின்றோம். இனிவரும் காலங்களிலும் கல்வியை அழியாமல் பாதுகாக்க அனைவரும் முன்னின்று உழைக்கவேண்டும். 

இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் கு.சுகுணன், வைத்தியசாலையின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் இராஜேந்திரன், மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதம தாதிய உத்தியோகத்தர் எம்.சசிகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கல்முனை ஆதார வைத்தியசாலைக்காக இயற்றப்பட்ட வைத்தியசாலை கீதம் அடங்கிய இறுவட்டு பிரதியமைச்சருக்கு வழங்கிவெளியிட்டுவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment