Thursday, April 10, 2014

நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலிலுள்ள ஒன்பது வர்த்தக நிலையங்களில் களவு!!

Thursday, April 10, 2014
இலங்கை::நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலிலுள்ள ஒன்பது வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு பெருமளவான பொருட்களும், பல இலட்சம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
அண்மைக்காலமாக வடக்கில் அதிகரித்துவரும் குற்றச் செயல்களுக்கு மத்தியில் ஆலயத்திற்கு அருகிலுள்ள கடைகள் ஒரே நேரத்தில் உடைக்கப்பட்டுள்ளமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
 
இங்குள்ள வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதுடன், சில வர்த்தக நிலையங்களில் திருட்டு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வர்த்தக நிலைய உரிமையாளர்களினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், தடவியல் நிபுணர்களின் பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது அங்கு வந்த பொலிஸாரினால் மதுபானப் பாட்டில் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment