Saturday, April 12, 2014
பீஜிங்::சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தில் முதன்முறையாக ஏவுகணைளை இயக்கும்
பிரிவில் பெண்கள் குழு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் இரண்டாம்
பீரங்கி படையில் உள்ள முதல் கன்வென்ஷனல் ஏவுகணைப் பிரிவில் இந்தப் பெண்கள்
சேர்க்கப்பட்டுள்ளனர் என்று ராணுவ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இவர்கள் அனைவரின் சராசரி வயதும் 20 ஆகும். பயங்கர ராணுவ பயிற்சியில் இவர்கள் அனைவரும் நன்கு செயல்பட்டதாக ராணுவத் தகவல்கள் கூறுகின்றன. இந்த குழுவில் உள்ள மொத்த பெண்களின் எண்ணிக்கையை ராணுவம் வெளியிடவில்லை. ஆனால் இதில் செயல்படும் அதிகாரிகள் மற்றும் பெண் வீரர்களில் 91 சதவிகிதத்தினர் கல்லூரிப் படிப்பு அல்லது அதற்கும் மேற்பட்ட உயர் கல்வியைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணைகளை இயக்கும் பெண்கள் இரண்டு முறை குண்டுகள் வீசும் பயிற்சியினையும் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் வீசிய அனைத்து குண்டுகளும் இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கின. இந்த பயிற்சியின் மூலம் பெண்கள் அனைவரும் போர்ப் பயிற்சிக்குத் தகுதியானவர்களாகத் தங்களை வெளிப்படுத்தினர். மக்கள் விடுதலை ராணுவத்தில் பெண்கள் முறையாக சேர்க்கப்பட்டதை இந்த மாதம் 3-ம் தேதி ஒரு விழாவாக நிகழ்த்தியதை ராணுவத் தகவல் அறிக்கைகள் பின்னர் தெரிவித்தன.
ராணுவத்தில் பெண் ஏவுகணை இயக்குனர்களைச் சேர்க்கும் பணியின் முதல் கட்டம் கடந்த 2012-ம் ஆண்டில் தொடங்கியது. அந்த ஆண்டே மார்ச் மாதத்தில் அனைத்து சீன மகளிர் சம்மேளனத்தின் விருது உள்பட பல விருதுகள் இந்த பெண்கள் குழுவிற்கு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
பெண்கள் ஏவுகணைக் குழுவினரின் பணியால் அவர்களின் தொழில்முறைத்திறன் மேம்படும். மற்றும் துருப்புகள் கட்டமைப்பு மேம்படவும், போர் வலிமை அதிகரிக்கவும் பெண்கள் குழுவினரின் திறன் உபயோகப்படும் என்று இரண்டாம் பீரங்கிப் படையின் ஏவுகணை பிரிகேட் அரசியல் பொறுப்பாளரான மா புஷெங் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment