Pages

Friday, April 25, 2014

மதப் பிணக்குகளை கையாளும் விஷேட பொலிஸ் பிரிவு திங்கட்கிழமை முதல் செயற்படும்!

Friday, April 25, 2014
இலங்கை::சமய முரண்பாடுகள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்படவிருக்கின்ற விசேட பொலிஸ் பிரிவு கொழும்பு, தர்மபால மாவத்தை இலக்கம் 135ல் அமைந்துள்ள பௌத்த மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சின் 5வது மாடியில் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்தார்.
 
பிரதேசங்களில் இருக்கின்ற பொலிஸ் நிலையங்களில் செய்யப்படுகின்ற முறைப்பாடுகள் தொடர்பில் திருப்தி கொள்ளாவிடின், இந்த பிரிவில் முறையிடலாம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த பிரிவில் உதவி பொலிஸ் அதிகாரியின் கீழ் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள்கள் அறுவர் கடமையாற்றுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
 
மதரீதியான பிரச்சினைகள் அதிகரித்துவரும் நிலையில், அவற்றைக் கண்காணிப்பதற்காகவும், கையாள்வதற்காகவும் விசேட பொலிஸ் பிரிவு ஒன்று அமைக்கப்படவிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச நேற்றுத் தெரிவித்திருந்தார். பௌத்த தீவிரவாத அமைப்புக்கள், சிறுபான்மையின மதத்தவர்கள் மீது தாக்குதல்களை நடத்திவருவதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களையடுத்தே இந்த விஷேட பொலிஸ் பரிவு அமைக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment