Monday, April 14, 2014

பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சிகளை தோற்கடிக்க வேண்டும்: இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க!

Monday, April 14, 2014
இலங்கை::நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தளபதி வெளியிட்டுள்ள செய்தியில், பிராந்திய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் நாட்டில் பிளவினை ஏற்படுத்தும் பல முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் முனைப்புக்களில் சில தரப்பினர் முயற்சித்து வருகின்றனர். தேசத்திற்கு எதிரான சவால்களை முறியடிக்க படையினர் எப்போது முனைப்புடன் செயற்பட வேண்டும். வடக்கு கிழக்கைச் சேர்ந்த இராணுவத்தினர் சிவில் மக்களுடன் இணைந்து புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment