Wednesday, April 23, 2014

யாழ். சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு சம்பவம்- சிறைச்சாலைக் காவலாளி பொலிஸில் சரண்!

Wednesday, April 23, 2014
இலங்கை::சிறைச்சாலையில் மறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியின் உயிரிழப்பைத் தொடர்ந்து சிறைச்சாலைக் காவலாளி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
சிறுகுற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவிற்கமைய கடந்த இரண்டு வாரங்களாக சிறையில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் கடந்த சில தினங்களிற்கு முன்னர் தாக்கப்பட்டிருந்தார்.
 
சிறைச்சாலை காவலாளி ஒருவரினால் தாக்குதலுக்குள்ளான கைதி நேற்றையதினம் உயிரிழந்திருந்தார். இவரின் உயிரிழப்பிற்கு காவலாளிகளே காரணமென கைதியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய காவலாளி ஒருவர் இன்றையதினம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தள்ளதாகவும், சம்வம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment