Pages

Sunday, April 13, 2014

ஜெயலலிதாவின் பிரதமர் சுருதி குறைந்தது: ப.சிதம்பரம்!

Sunday, April 13, 2014
சென்னை::தென்சென்னை காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.வி.ரமணியை ஆதரித்து மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வாக்கு சேகரித்தார். நுங்கம்பாக்கத்தில் நடந்த காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது:
 
தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி அமைத்துள்ளன. இரண்டு கட்சிகளின் எல்லை தமிழகத்தில் மட்டும் தான். இவர்களால் தமிழக எல்லையை தாண்டி வேட்பாளர்களை நிறுத்தவும் முடியாது. வெல்லவும் முடியாது.தற்போது, நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் அதிமுகவினர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அம்மா தான் அடுத்த பிரதமர் என்றனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் சுருதி சற்று குறைந்து மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் என்றார்.பின்னர் சற்று சுருதி குறைந்து பிரதமர் பதவி, மத்திய அமைச்சர் பதவிகள் மீது எங்களுக்கு ஆசை இல்லை என்றார். தற்போது தமிழக மக்களின் வளர்ச்சி தான் முக்கியம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இனிமேல் முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசின் பங்களிப்பு பற்றி பேச வேண்டாம்.

தமிழகத்தை மட்டும் பற்றி பேசட்டும் என்று அவரை நான் கேட்டுக் கொள்கிறேன்.ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் அரசு ஆட்சி அமைக்கும் போது நிலை யான ஆட்சி அளித்தது. ஒரு தடவை கூட கவிழ்ந்த தாக சரித்திரம் கிடையாது. காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைந்தால் நிலையான ஆட்சியை மக்களுக்கு அளிக்க முடியாது. காங்கிரஸ் அரசு இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றியது.மின்தடைக்கு சதி செய்கிறார்கள் என்கிறார் ஜெயலலிதா. மின்சாரத்தை சேமிக்கவும் முடியாது. தேக்கி வைக்கவும் முடியாது. ஜெயலலிதா இவ்வாறு பேசுவது வேடிக்கையாக உள்ளது. மின் உற்பத்தி குறைவினாலேயே தமிழகத்தில் மின்தடை இருந்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.பொதுக்கூட்டத்துக்கு, மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமை வகித்தார்.

No comments:

Post a Comment