Pages

Monday, April 14, 2014

இந்திய இலங்கை உறவுகளில் விரிசல் ஏற்படக் கூடிய வாய்ப்பு கிடையாது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா!

Monday, April 14, 2014
இலங்கை::இந்திய இலங்கை உறவுகளில் விரிசல் ஏற்படக் கூடிய வாய்ப்பு கிடையாது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா தெரிவித்துள்ளார். பல்வேறு ஏதுக்களின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவுலும் வலுவாகக் காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் திடீரென விரிசலை ஏற்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக வாக்களிப்பதன் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படக் வாய்ப்பில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் முழு அளவில் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல் போதல்கள், கைதுகள், அதி உயர் பாதுகாப்பு வலயம் பேர்ற பல்வேறு முக்கியமான பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வின் அடிப்படையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச்சட்டம் மற்றும் அதற்கு அப்பாலான தீர்வுத் திட்டத்தின் மூலம் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வினை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தைகளின் மூலம் காத்திரமான தீர்வுத் திட்டங்களை எட்ட முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment