Pages

Tuesday, April 22, 2014

புலிகள் ஆதரவு சுவரொட்டி: மானிப்பாய் கணினி பயிற்சி நிறுவனத்துக்கு ‘சீல்’ வைப்பு: கிளிநொச்சி ஆனந்தபுரம் பிரதேசத்தை சேர்ந்த நால்வர் கைது!

Tuesday, April 22, 2014
இலங்கை::புலிகளின்
மீள்உருவாக்கத்துக்கு ஆதரவாகச் செயற்பட்டதாகக் கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல கணினி ஆசிரியர் கைது செய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார்.
 
மானிப்பாயிலுள்ள அவரது கணினி நிறுவனமும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
 புலிகளுக்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில் யாழ். நகரில் வைத்து கடந்த வாரம் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை அனைவருக்கும் தெரிந்தததே. அதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது மானிப்பாயிலுள்ள கணினிப் பயிற்சி நிறுவனத்திலேயே குறிப்பிட்ட சுவரொட்டிகள் அச்சிடப்பட்டமை தெரியவந்ததது.
 
இதனையடுத்து அந்த அச்சகம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. கணினிப் பயிற்சி நிறுவனமும் ‘சீல்’ வைக்கப்பட்டு மூடப்பட்டது. அங்கிருந்த கணினிகள் மடிக் கணினிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. நிறுவனப் பொறுப்பதிகாரியான கணினி ஆசிரியர் கைது செய்யப்பட்டு கொழும்பில் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
 
கிளிநொச்சி ஆனந்தபுரம் பிரதேசத்தை சேர்ந்த நால்வர்  கைது!
 
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்தபுரம் பிரதேசத்தை சேர்ந்த நால்வரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அப்பகுதியிலுள்ள வீடொன்றை சோதனைக்கு உட்படுத்திய போது போலியான இறப்பர் முத்திரை மற்றும் ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாகவும் அங்கிருந்த நால்வரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment