Wednesday, April 23, 2014

தமிழ் அரசியல் கட்சிகள் உள்விவகாரப் பிரச்சினைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பில் முறைப்பாடு செய்வதில் எவ்வித பயனும் கிடையாது: டியூ.குணசேகர!

Wednesday, April 23, 2014
இலங்கை::தமிழ் அரசியல் கட்சிகள் உள்விவகாரப் பிரச்சினைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பில் முறைப்பாடு செய்வதில் எவ்வித பயனும் கிடையாது என அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.
 
தமிழ் அரசியல் கட்சிகளோ அல்லது குழுக்களோ இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பிடமோ அல்லது இந்தியாவிடமோ முறைப்பாடு செய்வதில் எவ்வித பயனும் கியைடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய ஐக்கியம் நிலைநாட்டப்படாத காரணத்தினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.தேசிய ஐக்கியத்தை நிலைநாட்டாது நாட்டில் பொருளாதார வளர்ச்சியை நிலைநாட்ட முடியாது என அவா சுட்டிக்காட்டியுள்ளார்.
 
 உள்விவகாரப் பிரச்சினைகளுக்கு உள்நாட்டு ரீதியில் தீர்வுத் திட்டங்களை எட்டுவதே பொருத்தமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.உள்நாட்டு கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment