Tuesday, April 8, 2014

வியட்நாம் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு!

Tuesday, April 08, 2014
இலங்கை::வியட்நாம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தலையிலான குழுவினர் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் திரு. கோடாபய ராஜபக்ஷ அவர்களை நேற்று (ஏப்.07) அமைச்சில் வைத்து சந்தித்தார்.

இச் சந்திப்பின் போது பாதுகாப்புச் செயலாளரும் வியட்நாம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தலையிலான குழுவினரும் இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவாக கலந்துரையாடியதுடன், சந்திப்பை நினைவு கூரும் முகமாக நினைவுச் சின்னங்களையும் பரிமாரிக் கொண்டனர்.
 
இந் நிகழ்வில் இராணுவத்தலபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக, தேசிய புலனாய்வுப் பிரதானி மேஜர் ஜெனரல் (ஓய்வு) கபில ஹெந்தவிதாரன மற்றும் அமைச்சின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment