Pages

Wednesday, April 9, 2014

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வாகரையில் பிரதேச விளையாட்டுப்போட்டி!


Wednesday, April 09, 2014
இலங்கை::தமிழ் சிங்களப் புதுவருடத்தினை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகமும், கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களமும் இணைந்து நடத்திய பிரதேச மட்ட விளையாட்டு விழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வாகரை- வம்மிவட்டுவான் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ஆர்.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இவ் விளையாட்டு விழாவில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதிகளாக , பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் வி.நவிரதன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன், வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித ஜெயரத்ன, பதில் பொறுப்பதிகாரி ரிஜெயசீலன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நேற்றைய விளையாட்டு விழாவில் காலை ஆண்பெண் இருபாலாருக்குமன மரதன், சைக்கிள் ஓட்டம் ஆகியன நடைபெற்றன. அதனையடுத்து , மாலை நிகழ்வுகளாக கண்காட்சி உதைபந்தாட்டப் போட்டி வம்மிவட்டுவான் வான்மதி விiயாட்டுக் கழகம், கதிரவெளி பிரன்ஸ் விளையாட்டுக் கழகம் என்பவற்றுக்கிடையில் நடைபெற்றது. அத்துடன், கிரிக்கட் போட்டி வாகரைப்பிரதேச செயலக உத்தியேகத்தர்களின் அணிகளுக்கிடையில் நடைபெற்றன.

அதே நேரம், கலாசார விளையாட்டு வரிசையில் முட்டி உடைத்தல், விசேட தேவையுடையேருக்கான ஓட்டப் போட்டி, சிறுவர்களுக்கான மிட்டாய் பொறுக்குதல் என்பனவு நடைபெற்றன.

இறுதி நிகழ்வான பரிசு வழங்கலின் போது, ஏற்கனவே நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment