Thursday, April 10, 2014
இலங்கை::யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையப் பொலிஸ் பொறுப்பதிகாரியாக ஈ.எம்.சுகத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை::யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையப் பொலிஸ் பொறுப்பதிகாரியாக ஈ.எம்.சுகத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னர் யாழ்ப்பாண யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையப் பொலிஸ் பொறுப்பதிகாரியாக
இருந்த சமன் சிகேரா உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பதவியுயர்வு
பெற்றதினையடுத்து அவ்விடத்திற்கு ஏக்கநாயக்க தற்போது
நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏக்கநாயக்க 1987 ஆம் ஆண்டு திருகோணமலை பொலிஸ் நிலையத்தில்
கடமையாற்றியிருந்ததுடன், தொடர்ந்து கொழும்பு அனுராதபுரம், கேகாலை,
பொல்காவளை, ரிதிகம, மீரிகம ஆகிய இடங்களில் கடமையாற்றி வந்துள்ளார்.
அத்துடன். இறுதியாக கடந்த 7 வருடங்களாக தம்புள்ள தலைமைப் பொலிஸ் நிலையப்
பொறுப்பதிகாரியாக கடமையாற்றி தற்போது யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார்.
இவர் தனது கடமைகளை கடந்த திங்கட்கிழமை (07) முதல் பொறுப்பேற்றுள்ளதாக யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment