Pages

Sunday, April 13, 2014

தமிழ் புலம்பெயர் புலிகள் ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகள் வரையறுக்கப்படும்: நியோமல் பெரேரா!

Sunday, April 13, 2014
இலங்கை::தமிழ் புலம்பெயர் புலிகள்   ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகள் வரையறுக்கப்படும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இலங்கைக்கு மட்டுமன்றி பிராந்திய வலயத்திற்கும் ஒட்டுமொத்த உலகிற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சித்தால் விமான நிலையத்திலேயே வைத்து கைது செய்யப்படுவர் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தடை செய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பயங்கரவாத நிதி சேகரித்தல் மற்றும் அரச விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

அமைப்புக்களைச் சேர்ந்தவர்களின் செயற்பாடுகள் உன்னிப்பாக அவதானிக்;கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.வெளிநாட்டு தூதரங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment