Pages

Tuesday, April 22, 2014

கிழக்கு மாகாண பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் லால் பேராரா: முஸ்லிம் சமய அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்குமிடையான சந்திப்பு!

Tuesday, April 22, 2014
இலங்கை::கிழக்கு மாகாண பாதுகாப்பு படைகளின் கட்டளைத்  தளபதி மேஜர் ஜென்ரல் லால் பேராராவுக்கும் கிழக்கு மாகாண முஸ்லிம் சமய அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்குமிடையான சந்திப்பொன்று வெலிகந்தவிலுள்ள முப்படைகளின் கட்டளைத் தலமையகத்தில் (17) இடம்பெற்றது.
 
அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த உலமாக்கள் பள்ளிவாயல் நிருவாகிகள் முஸ்லிம் நிருவனங்களின் தலைவர்கள் மற்றும புத்தி ஜீவிகள் அடங்கலாக 70 பேர் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
 
கட்டளைத் தளபதியின் விஷேட அழைப்பின் பேரில் இடம் பெற்ற இச் சந்திப்பு முஸ்லிம் சமய பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்குமிடையான புரிந்துணர்வையும் மதவாதக் குழப்பக் குழுக்களின் மீதான  அவதான நடவடிக்கை முனனெடுப்பு தொடர்பான தெளிவையும் ஏற்படுத்துவதை நோக்காக கொண்டு இடம் பெற்றுள்ளது.
காலை 11 மணிக்கு ஆரம்பமான இச் சந்திப்பு மதிய போஷன விருந்துபசாரத்துடன் நிறைவு பெற்றது. சந்திப்பின் ஆரம்பம் முதல் இறுதி வரை முஸ்லிம் சமய கலாச்சாரங்களுடன் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளமை முக்கிய அம்சமாகும்.
இங்கு கருத்துத் தெரிவித்த இராணுவத் தளபதி 
சில முஸ்லிம் பிரதேசங்களில் போதைப் பொருள் பாவனையால் இளைஞர்கள் தவறான திசையை நோக்கி பயணிக்கின்றனர். இவர்களை சீர்படுத்துவதற்கு மார்க்க ரீதியான உபன்யாசங்களே சிறந்த வழிகளாகும். இவ்வாறானவர்களை கட்டுப்படுத்த படைப்பலம் தேவைப்படும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அதனைத் தந்துதவ நாம் தயாராக உள்ளோம்.
 
அவ்வப்போது முஸ்லிம் பிரதேசங்களில் இடம் பெற்று வந்துள்ள அசாதாரண சூழ்நிலைகளுக்கு  பல்வேறு பின்னனிகளுடன் செயற்படுகின்ற குழப்பவாதக் குழுக்களே காரணமாகும். இவற்றின் பின்புலத்தை அறிந்து எமது இளைஞர்களை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு எதிர்காலத்தில் எம் அனைவருக்கும் உண்டு.
 
இணையத்தளம்,பேஸ்புக் மற்றும் குறுஞ் செய்திச் சேவைகள் என்பன எவ்வித பரிசோதனைகளுமின்றி செய்திகளை வெளியிடுகிின்றன. இதனை உடனடியாக நம்பிச் செயற்படுகின்ற நிலையிலிருந்து விடுபட்டு இது தொடர்பான உண்மை நிலையை அறிந்து செயற்படத் தேவையான  இக்கட்டான சூழ்நிலையில் நாம் உள்ளோம்.
நாட்டில் உள்ள அனைத்து மக்களின் ஒன்றிணைந்த வாழ்வுக்கும் நீதியான ஆட்சிக்கும் ஜனாதிபதியும் பாதுகாப்பு தரப்பினரும் செயற்படும் போது இன்னுமொரு குழுவினர் இந்த நாட்டை மியன்மாராகவோ, பர்மாவாகவோ மாற்ற கங்கனம்  கட்டிச் செயற்படுகின்றனர்.இப்பொறிக்குள் விழாமல் நிதானமாக செயற்பட வேண்டியவர்களாக நாம் உள்ளோம் என்றார்.
 
முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை, பாதுகாப்பு தரப்பினருடனான உறவு பேணல் உள்ளிட்ட பல விடயங்களும் கேள்வி பதிலினூடாக பரிமாறப்பட்டன.
 
சமூக மாற்றத்திட்டம் தொடர்பான புரோஜெக்டர் வரைபொன்றும் விபரிக்கப்பட்டது.

No comments:

Post a Comment