Pages

Monday, April 21, 2014

கருத்து மோதல்களுடன் நடைபெறுகிறது யாழ்.ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்!!

 Monday, April 21, 2014
இலங்கை::வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் யாழ். அரச செயலகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. முன்னதாக தொடக்க நிகழ்வினை யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமை நாயம் தொடங்கி வைத்தார். அதன் தொடராக இணைத்தலைமைகளின் உரைகள் இடம்பெற்றன. அதன் பின்னர் கடந்த கூட்டத் தொடர் தொடர்பிலான அறிக்கை வாசிக்கப்பட்டது.
 
குறித்த அறிக்கையில் கடந்த கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் சில உள்ளடக்கப்படவில்லை எனத் தெரிவித்து கூட்டத்தில் கருத்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இணைத்தலைமைகளாக பங்கேற்ற முதலாவது கூட்டத் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இருவேறு நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திக் கூட்டமைப்பில் அங்கம் பெறும் ஈபிடிபியினரும் காரசாரமான விவாதங்களில் ஈடுபடுவதற்கான புறச்சூழல் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தில் பங்கேற்பதற்காக கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி மற்றும் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபையின் உறுப்பினர்களும் அங்கு பிரசன்னமாகியிருக்கின்றனர். தொடக்க நிகழ்விற்கு யாழ்.அரச அதிபர் தலைமை தாங்கி வரவேற்புரை நிகழ்த்தினார்.
 
 அதைத் தொடர்ந்து நில அபகரிப்பு உட்பட்ட விடயங்கள் தொடர்பிலும் கடந்த கூட்டத் தொடர்பிலான அறிக்கை தொடர்பிலும் கடும் விவாதங்கள் நடைபெறுகின்றன. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் உட்பட்டவர்களும், ஐ.தே. க நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலாவும் ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்...

No comments:

Post a Comment