Wednesday, April 09, 2014
இலங்கை::கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் சித்திரைப்புத்தாண்டினை சிறப்பிக்கும் வகையில் திவிநெகும சந்தைகள் திறக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் தோறும் திவிநெகும சந்தைகள் திறக்கப்பட்டுவருகின்றன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு முதன்முறையாக நேற்று இந்த புத்தாண்டு சந்தைகள் திறந்துவைக்கப்பட்டுள்ளன.
திவிநெகும பயனாளிகளின் உற்பத்திக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் தமிழ் சிங்கள புத்தாண்டில் மலிவு விலையில் பொருட்களை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும் இப்புத்தாண்டு சந்தை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தின் முதலாவது புத்தாண்டு சந்தை வெல்லாவெளியில் திறந்துவைக்கப்பட்டது.
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் திறந்துவைக்கப்பட்ட இந்த சந்தையின் திறப்பு விழா போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் குணரெட்னம்,களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் கு.சுகுணன்,மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் மனோகிதராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது புத்தாண்டு சந்தை அதிதிகளால் திறந்துவைக்கப்பட்டதுடன் பெருமளவான பொதுமக்களும் இதன்போது பொருட்கொள்வனவிலும் ஈடுபட்டனர்.
அத்துடன் ரட்ட விருவோ வீட்டுக்கடன் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றதுடன் நூறு மாணவர்களுக்கான பாதணிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
இதன்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.

No comments:
Post a Comment