Wednesday, April 9, 2014

பாகிஸ்தான் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுடன் சந்திப்பு!

Wednesday, April 09, 2014
இலங்கை::பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவர் ஜெனரல் ரஷாட் மஹ்மூத் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் தயா ரத்நாயகவை நேற்று (ஏப்.08) சந்தித்தார்.

ஜெனரல் ரஷாட் மஹ்மூத் பாகிஸ்தான் இராணுவ ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டு அந்நாட்டின் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

இரு நாட்டு இராணுவ உயரதிகாரிகளுக்குமிடையிலான இச் சந்திப்பின் போது, இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவாக கலந்துரையாடியதுடன், சந்திப்பை நினைவு கூரும் முகமாக நினைவுச் சின்னங்களையும் பரிமாரிக் கொண்டனர்.
 
இலங்கை மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு இடையில் கடந்த காலங்களில் மிகவும் நெருக்கமான உறவுகள் காணப்படுவதுடன் இவரது விஜயம் இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment