Sunday, April 20, 2014இலங்கை::வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் அச்சபையின் உறுப்பினரான அனந்தி எழிலனுக்கு மிடையேயான முறுகல் நிலை தொடர்ந்து வருவ தா
யாழ். வர்த்தகர் சங்கத்தினால் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் முதலமைச்சர்
கலந்துகொள்ளாமையையிட்டு அனந்தி தனது அதிருப்தியை அவரிடம் நேரடியாகத் தெரிவிக்க
முயன்றுள்ளார். அத்துடன் ஜெனீவாவில் இடம்பெற்ற சில உட்கட்சி முரண்பாடுகள்
தொடர்பாகவும் முதலமைச்சரிடம் அனந்தி தெரிவிக்க முற்பட்டுள்ளார்.
இதனை முன்கூட்டியே
அறிந்தமையால், முதலமைச்சர் விக்னேஸ்வரன் அனந்தியைச் சந்திப்பதைத் தவிர்த்து
வருவதாகத் தெரியவருகிறது. தேர்தலில் முதலமைச்சருக்கு அடுத்ததாக அதிகப்படியான
வாக்குகளை எடுத்த தன்னாலேயே கடந்த ஒருமாத காலமாக முதல்வரைச் சந்தித்துரையாட
முடியாவிடின், வாக்களித்த ஒரு சாதாரண பிரஜையின் நிலை எப்படியிருக்கும் என எண்ணி
அனந்தி கவலைப்பட்டதாகவும் தெரியவருகிறது.

No comments:
Post a Comment