Saturday, April 5, 2014

கடற்படையின் ஏற்பாட்டில் அனர்த முகாமைத்துவம் மற்றும் உயிர் காப்பு நிகழ்ச்சி திட்டம்!

Saturday, April 05, 2014
இலங்கை::கேகாலை பிரதேச செயலாளரின் வேண்டு கோளுக்கு இணங்கவும் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் கேகாலை பிரதேசவாசிகளுக்கான அனர்த முகாமைத்துவம் மற்றும் உயிர் காப்பு நிகழ்ச்சி திட்டமொன்று கடற்படையின் ஏற்பாட்டில் கிதுல்கல பிரதேசத்தில் இடம்பெற்றது.
 
கடற் படையின் அதிரடி நடவடிக்கை படகு பிரிவு மற்றும் துரிதமாக இயங்கும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் படை பிரிவு போன்றவற்றால் இந்நிகழ்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சி திட்டத்தின் போது நீர் சம்மந்தமான விபத்துக்கள், அவை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றிற்கான துரித நிவாரணங்கள் என்பன பயிற்றுவிக்கப் பட்டன.
 
மேலும் இந் நிகழ்வின் போது உயிர் காப்பு உபகரணங்களின் பயன்பாடு, கயிறு மற்றும் முடிச்சுக்கள், உயிர் காப்பு நடைமுறைகள், தலைமைத்துவம், குழு ஒத்துழைப்பு மற்றும் முதலுதவி செயல்முறைகள் என்பன பயிற்றுவிக்கப்பட்டன.

No comments:

Post a Comment