Pages

Friday, April 11, 2014

அமெரிக்காவில் அதிர்ச்சி :ஹிலாரி கிளின்டன் மீது ஷூ வீச்சு!!!

Friday, April 11, 2014
லாஸ் வேகாஸ்::அமெரிக்க முன்னாள் வெளியுறவு துறை அமைச் சர் ஹிலாரி கிளின்டன் மீது ஷூ வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், நேற்று லாஸ் வேகாஸ் மாகாணத்தில் உள்ள மண்டாலே பே ஓட்டலில் நடைபெற்ற விழா வில்  பங்கேற்றார். அதில் ஹிலாரி பேசிக் கொண்டிருந்தார். அப்போது பார்வையாளர் வரிசையில் இருந்த ஒரு பெண், திடீரென ஷூவை ஹிலாரி மீது வீசினார். இதனால்  பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த அமெரிக்க பாதுகாப்பு வீரர்கள் மற்றும் ஓட்டல் பாதுகாவலர்கள் விரைந்து சென்று அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர்.

பார்வையாளர்கள் கூட்டத்தில் இருந்த பெண் ஷூ வீசியதும், ஹிலாரி சட்டென்று விலகினார். எனினும் பதற்றம் அடையாமல் தொடர்ந்து உரை நிகழ்த்தினார். ஷூ வீசிய  பெண்ணை கைது செய்து ரகசிய இடத்தில் விசாரித்து வருகிறோம் என்று அமெரிக்க உளவு துறை செய்தி தொடர்பாளர் ஜார்ஜ் ஓகில்வி தெரிவித்தார். ஏற்கனவே கடந்த  2008ம் ஆண்டு முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், ஒரு நிகழ்ச்சியில் பேசி கொண்டிருந்த போது ஈராக் பத்திரிகையாளர் முந்தாதர் அல் ஜைதி என்பவர் ஷூ வீசி தாக்கினார்  என்பது குறிப்பிடத்தக்கது. -

No comments:

Post a Comment