Pages

Friday, April 4, 2014

ஜெனீவா அமர்வுகளுக்கு முன்னதாகவே புலம்பெயர் புலிகள் ஆதரவு தமிழ் அமைப்புக்களை தடை செய்திருக்க வேண்டும்: விமல் வீரவன்ச!

Friday, April 04, 2014
இலங்கை::உள்நாட்டு விவகாரங்களில் இடம்பெறும் எல்லா வெளிநாட்டுத் தலையீடுகளுக்கும் ஒரே காரணம்  புலிகளை அழித்தது தான்.” இவ்வாறு கூறியுள்ளார் அமைச்சர் விமல் வீரவன்ச.
 
ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு முன்னதாகவே புலம்பெயர் புலிகள் ஆதரவு தமிழ் அமைப்புக்களை தடை செய்திருக்க வேண்டுமென ஜே.என்.பி கட்சி தெரிவித்துள்ளது.இலங்கை அரசஙர்கம் அண்மையில் 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்திருந்தது.

புலம்பெயர் புலிகள் ஆதரவு தமிழ் அமைப்புக்களினால் நாட்டுக்கு அதிகளவான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக மனித உரிமை ஆர்வலர்கள் என்ற அடிப்படையில் இலங்கைக்கு எதிராக புலம்பெயர் புலிகள் ஆதரவு தமிழ் அமைப்புத் தலைவர்கள் போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

புலம்பெயர் புலிகள் ஆதரவு தமிழ் அமைப்புக்கள் தமிழீழத்தை அமைக்கும் முனைப்புக்களில் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளது. புலம்பெயர் புலிகள் ஆதரவு தமிழ் அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் எடுத்த நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டியது என குறிப்பிட்டுள்ளது...
 
பல்வேறு வடிவங்களில்  இலங்கைக்கு எதிரான வெளிநாட்டுச் சதிகள் இடம்பெறுகின்றன. புலம்பெயர் புலிகள் ஆதரவு தமிழர்களும், குறிப்பிட்ட மேற்கு நாடுகளும்  குழப்பத்தை ஏற்படுத்த விரும்புகின்றன. போர்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த,  அரசாங்கத்திற்கு எதிராக தீர்மானத்துக்கு ஆதரவு திரட்ட சர்வதேச சமூகத்துக்கு இலங்கை  மோசமான நாடாக சித்திரிக்க இவர்கள் முனைகின்றனர். பல்வேறு நபர்களைப் பயன்படுத்தி, இலங்கைல் குழப்பத்தை ஏற்படுத்த மேற்கு நாடுகளும், தேசப்பற்றில்லாத  இலங்கைர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் சில அரசுசாரா நிறுவனங்களும் முயற்சிக்கின்றன.
 
இந்த எல்லா வெளிநாட்டுத் தலையீடுகளுக்கும் காரணம் என்னவென்றால்,  புலிகள் தோற்கடிக்கப்பட்டது தான்.  புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்ட போதிலும், நாம் உள்நாட்டு வெளிநாட்டு எதிரிகளைக் கொண்டுள்ளோம். எல்லா இலங்கையர்களும் இந்த எதிரிகளைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த எதிரிகளைத் தோற்கடிக்க இலங்கைஅரசுக்கு ஆதரவு தரவேண்டும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment